நாடகம் நடத்தி,பகடைகளை நகர்த்தி, பிழைத்துக் கொண்டிருந்த சதிகாரர்கள் திகைத்துப் போயினர்!
கருணையற்ற,மனித மற்ற,மிருகங்களாய் உருமாறிய சுயநலமிகள்!
சுழன்று கொண்டு இருக்கும் நீதிச் சக்கரத்தின் கண்களில் அகப்பட்டுக் கொண்ட திமிங்கலங்கள்!
ஒவ்வொரு விடியலிலும் ஒரு புதிய நிகழ்வு அரங்கேற்றப்படுகிறது!
பிரபஞ்ச நகர்வுகளுக்கு கூட மனிதத்தின் பிணைப்புகளை வலிமையாக்க இயலும்!
மனிதர்களின் மானத்தை ஏலமிடும்
தீய அரக்கர்களுக்கு இறைவன் இட்ட நீதியின் வெளிப்பாடு!
கயவர்களின் கோட்டை திடீரென இடிந்து விழுந்தது!
மாற்றங்கள் பிரபஞ்சத்தால் அரங்கேற்றப்படும்!
இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு மனித சமூகத்தின் அதிகார மீறல்கள் காற்றில் கரைந்து போகின்றன.
வீரத்தின் விளைநிலமாய் இருந்த மகா சக்கரவர்த்திகளுக்கு கூட நீதியின் போக்கிலிருந்து தப்ப இயலவில்லை!
சரித்திரங்கள் இயற்றப்படட்டும்!
இலக்கியங்கள் சமூக நீதியை காக்கட்டும்!
வாய்மை வெல்லட்டும்!