Mangalaprathaban

நகர்வை மேற்கொண்ட ஒரு சிப்பாய்

கலகமற்ற காகிதப் பணயம்!

சிலந்தி வலையைப் பின்னுகிறது;

நூதன முறையில் ஒரு இழப்பு!

பறக்கும் பட்டாம்பூச்சிகள் மழையில் நனைந்தன.

அரசன் தன் மகுடத்தை காக்க வேண்டும்!

ஓநாய்கள் தயாராய் இருந்தன.

சில நேரங்களில் ஒரு குதிரை இலாவகமாக பயணிக்கக் கூடும்!

அரசியின் முடிசூட்டு விழாவில் யானைகள் தயங்காமல் முன்னேறின.

முடிவுறாத ஒரு போர்!

துவக்கத்தில் தங்கிய போர் வீரர்கள்!

நான் நிழல்களை இரசிக்கிறேன்.

கபடம் கரைந்துள்ள சில சிதலங்களைக் கண்டு மீண்டும் ஒரு கவிதை பிறக்கிறது!

ஓநாய்களின் நிழல்கள் அழுகின்றன.

அரியணையில் அமர்ந்து கொண்ட ஒரு அரசி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top