இடிந்து விழுந்த கோபுரங்கள்
திடீர் திடீரென பெய்த மழை!
குடிசைகளுக்குள் புகுந்த பெருவெள்ளம்!
பரிதவித்த ஏழை மாணாக்கர்கள்!
இயற்கையற்ற விதிகளை செயற்கையாய் உருவாக்கும் செம்மறி ஆட்டு கூட்டங்கள்!
“இனி ஒரு சதி செய்வோம்! ” என்கிற சதிகார கும்பல்!
தொலைந்து போன மனிதத்தை தேடிக் கொண்டிருக்கும் கவிஞர்கள்!
மீண்டும் கோபுரங்கள் எழுப்பப்படும்!
மனிதம் மட்டும் தழைத்தோங்கும்!